சென்னை : அடுத்த 24 மணி நேரத்தில் ‘புரெவி’ புயல் உருவாக வாய்ப்பு இருப்பதால் தென் தமிழகத்தில் 2–ந் தேதி முதல் 4-ந் தேதி வரை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகத்தில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறியது. தற்போது மத்திய பகுதியில் மையம் கொண்டுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்கள் வட தமிழகத்திலும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அத்துடன் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது புயலாக மாறி, நாளை இலங்கையில் கரையை கடக்கும். பின்னர் குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. இதனால் 3–ந்தேதி நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடியில் அதிக கன மழை பெய்யக்கூடும். சென்னையில் மதிமான மழை பெய்யும்.
நாளை முதல் 4–ந்தேதி வரை அதீத கனமழை பெய்ய கூடும் என்பதால் தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலாக மாறவும் புதிய புயல் உருவாகவும் வாய்ப்புள்ளது. இதற்கு புரெவி என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் தென் தமிழகத்தில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. எனவும் தெற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு அறிவுறுத்தியுள்ளது.