முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளங்கலை பி.எட் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்: அமைச்சர் அன்பழகன்

செவ்வாய்க்கிழமை, 1 டிசம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் இளங்கலை கல்வியியல் (B.Ed.)   பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக பதிவு செய்யலாம் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2020-2021ஆம் கல்வியாண்டிற்கான இளங்கலை கல்வியியல் (B.Ed.)   பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக 04-12-2020 முதல் 10-12-2020 வரை  www.tngasaedu.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். 

விண்ணப்பம் பதிவு செய்ய விண்ணப்ப கட்டணமாக ரூ.500 - செலுத்தப்பட வேண்டும். SC/ST விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் ரூ.250- மட்டும் செலுத்தினால் போதுமானது. மாணாக்கர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது விருப்ப வரிசைப் படி கல்லூரிகளை தெரிவு செய்தல்  வேண்டும். 

மேலும் மாணாக்கர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களின் சான்றிதழ்களை  www.tngasaedu.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல் வேண்டும். இது தொடர்பான கூடுதல் விபரங்கள் மற்றும் எந்தெந்த கல்லூரிகளில் என்னென்ன பாடப்பிரிவுகள் சேர்க்கை எண்ணிக்கை விவரங்கள் www.tngasaedu.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளது. 

இணையதளத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் மாணாக்கர்கள்                 044-22351014,   044-22351015 மற்றும் 044-28278791 என்ற எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு கூடுதல் விவரம் மற்றும் வழிகாட்டுதல் பெறலாம்.

இது தொடர்பாக [email protected] மற்றும் [email protected]என்ற முகவரி மூலமாகவும் மாணாக்கர்கள் சந்தேகங்களை கேட்டு தேவையான வழிகாட்டுதல்களைப் பெறலாம். இவ்வாறு அமைச்சர் அன்பழகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து