புதுடெல்லி : டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், தங்கள் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளார். மத்திய அரசுடனான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நாளை 3-ம் தேதி நடக்கும் என்று விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன.
வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் விவசாயிகள் ஐந்தாவது நாளாக தொடர்ந்தது. டெல்லி எல்லையில் முகாமிட்டு டெல்லி சலோ என்ற பெயரில், டெல்லியை நோக்கி பேரணி மற்றும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் டெல்லி - அரியானா எல்லையில், சிங்கு மற்றும் டிக்ரியில் தொடர்ந்து ஐந்தாவது விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் மத்திய அரசு விவசாய அமைப்புகளுடன் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததையடுத்து நேற்று மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தலைமையில் இப்பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பேச்சுவார்த்தையில் பங்கேற்ற 10 விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாவது, மத்திய அரசுடனான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை டிச.3-ம் தேதி(நாளை) நடக்கும் .அதுவரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.