முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிக் பாஷ் லீக் டி20-யில் விளையாடுகிறார் ஜேசன் ஹோல்டர்

செவ்வாய்க்கிழமை, 1 டிசம்பர் 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

சிட்னி : வெஸ்ட் இண்டீஸ் அணி நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதேவேளையில் வருகிற 10-ந் தேதி ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் டி20 தொடர் தொடங்குகிறது. 

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் 3 போட்டிகளில் விளையாட சிட்னி சிக்சர்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.

அதன்படி சிட்னி சிக்சர்ஸ் டிசம்பர் 20-ந் தேதி அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியையும், 26-ந் தேதி மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியையும், 29-ந் தேதி மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியையும் எதிர்கொள்கிறது. இந்த போட்டிகளிலும் ஜேசன் ஹோல்டர் விளையாடுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து