முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் நாளை மதுரை வருகை: முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆய்வு

புதன்கிழமை, 2 டிசம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : முடிவுற்ற திட்டப்பணிகள் மற்றும் புதிய திட்டப்பணிகளைத் துவக்கி வைப்பதற்காக நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மதுரை வருவதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்  நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைக்கவும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலக கட்டிடத்தை திறந்து வைக்கவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை மதுரை வருகி்றார். முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் மதுரை மாவட்ட கலெக்டர் அன்பழகன், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, 

இயற்கையை கையாள்வதில் புதிய இலக்கணம் படைத்திருக்கிறார் தமிழக முதல்வர். நீர் மேலாண்மையில் புரட்சியை ஏற்படுத்தி, நீர் மேலாண்மையில் இந்திய தேசத்தில் தாய் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிற ஒரு வரலாற்றுச் சிறப்பினை பெற்றுத் தந்திருக்கிறார்.  நீர் நிலைகளை தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணித்ததன் காரணமாக, கடந்து சென்ற நிவர் புயலினால் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொண்டு மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். 

 தற்போது உருவாகியுள்ள “புரவி” புயலை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விரிவான ஆய்வுக்கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெற்றது.  தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மணிக்கு 12 கி.மீ வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. 

முதல்வரின் உத்தரவின்படி பேரிடர் மேலாண்மைத் துறை, மாநில கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றோம்.  இப்புயலானது கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் அதிக இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்.  

தமிழகத்தில் உள்ள 14,144 பாசன ஏரிகளில் 2,692 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.  கடலோர மாவட்டங்களில் உள்ள 7,378 ஏரிகளில் 1,579 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.  தென் மாவட்டங்களான மதுரை, தேனி, திண்டுக்கல், இரமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 7,075 ஏரிகளில் 979 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.  100 சதவிகிதம் கொள்ளளவை எட்டியுள்ள ஏரிகளிலிருந்து உபரி நீரை வெளியேற்றுவதற்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.  மீனவர்களுக்கு உரிய உத்தரவுகள் மற்றும் அறிவிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.  தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல உத்தரவிட்டுள்ளது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

முதல்வரின் தொடர் நடவடிக்கையின் காரணமாக, மதுரை மாவட்டத்தில் 27 இடங்கள் பாதிக்கப்படக்கூடிய இடங்களாக அடையாளம் காணப்பட்டு, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் இணைந்து மண்டல குழுக்களில் பங்கேற்று நிவாரண முகாம்களில்; பணியாற்ற உள்ளனர்.  பேரிடர் மேலாண்மை துறை, தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறை பங்கேற்ற பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றது.  “புரவி” புயலினால் மதுரை மாவட்டம் வரை மழை இருக்கும் என செயற்கைக் கோள் வரைபடம் தெரிவிக்கும் நிலையில், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

முதல்வரின் உத்தரவிற்கிணங்க, வேளாண்மைத் துறை செயலாளரின் அறிவுரைகளைப் பின்பற்றி பயிர்சேதமில்லாமல் தென்னந்தோப்புகள் மற்றும் வாழைத் தோப்புகளைப் பாதுகாத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.  குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் தோட்டங்கள் அதிகமாக இருப்பதனால் அவற்றை பாதுகாப்பது குறித்த அறிவுரையும் வழங்கப்பட்டுள்ளது.  மேலும் 100 சதவிகிதம் பயிர்க் காப்பீடு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன.  தேவையான உணவுப் பொருட்களை இருப்பு வைத்திருக்க உணவு மற்றும் கூட்டுறவுத் துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.  அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் அந்தந்த மாவட்டங்களில் முகாமிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.   அதனடிப்படையில் அனைத்து துறை செயலர்களும், கண்காணிப்பு அலுவலர்களும் களத்திலிருக்கிறார்கள்.  

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், 1916-ம் ஆண்டு கட்டப்பட்டு ஏறத்தாழ 100 ஆண்டுகள் தொன்மை வாய்ந்ததாகும்.  இவ்வலுவலகம் 30 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.  தென் தமிழகத்தின் தலைமையிடமாக கருதப்படும் மதுரையில் அனைத்து துறைகளின் மாவட்ட அளவிலான அலுவலகங்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்காக பேரவை விதி 110-ன் கீழ் 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட கலெக்டர்  பெருந்திட்ட வளாக கட்டடம், பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கட்டடமாக, முதல்வரால் நேரில் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது வரும் 4-ம் தேதி அன்று தமிழக முதல்வர் நேரிலே வருகை தந்து மதுரையினுடைய வெள்ளை மாளிகையை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க உள்ளார். 

மதுரை மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்காணும் பொருட்டு, முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியிலிருந்து மதுரை மாவட்டத்திற்கு குடிநீர் கொண்டு வரும் ரூ.1,295.76 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். ரூ. 69 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளையும் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறார்.  மேலும் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டமும் முதல்வர் தலைமையில் நடைபெறவுள்ளது. 

தமிழக முதல்வர் தாய்த் தமிழ்நாட்டில் முதன் முதலாக மைசூர் மற்றும் வாரனாசியைப் போன்று மதுரை விமான நிலைய ஓடுதளப் பாதையை (UNDER PASS)முறையில் நீட்டிப்பதற்கு ஒப்புதல் வழங்குவதற்கான ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். தமிழக முதல்வர் மதுரை மாவட்டத்திற்கு சிறப்பு சேர்க்கின்ற வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார்.  மதுரை மாவட்ட மக்களின் சார்பாக தமிழக முதல்வருக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து