முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவனந்தபுரம் மாநகராட்சித் தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து, தமிழ்மகன் உசேன் தீவிர பிரச்சாரம்

புதன்கிழமை, 2 டிசம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாநகராட்சித் தேர்தல் வருகிற 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநகராட்சித் தேர்தலில் 7 வார்டுகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். 27-வது வார்டு பாளையத்தில் ஏ. கோபகுமார், 28-வது வார்டு தைக்காடு பகுதியில் சி.வி. வித்யாராணி, 40-வது வார்டு திருமலையில் பி. ஜெயன் திருமலை, 42-வது வார்டு பூஜப்புரை பகுதியில் ஏ. கிரிஜா குமாரி, 50-வது வார்டு பொன்னுமங்கலம் சுனில்குமார், 71-வது வார்டு சாலையில் எஸ். ராஜேஸ்வரி, 76-வது வார்டு பீமாபள்ளி கிழக்கு பகுதியில் ஈஸாக் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள். இவர்களை ஆதரித்து, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளரும், அ.தி.மு.க.  ஆட்சி மன்றக் குழு உறுப்பினருமான, தமிழ் நாடு வக்பு வாரிய முன்னாள் தலைவர் டாக்டர் அ.தமிழ்மகன் உசேன், கேரளாவின் பிரசித்தி பெற்ற, பீமாபள்ளி தர்காவிற்கு வந்தார்.

அவரை தர்கா நிர்வாகிகளும், கேரளா மாநில அ.தி.மு.க.  நிர்வாகிகளும் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். பீமாபள்ளி தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்து விட்டு, தேர்தல் பிரச்சாரத்தை கேரள மாநிலக் கழகச் செயலாளர்  ஜி. சோபகுமார் தலைமையில், மாநில அவைத் தலைவர் எம்.எஸ். மணி, மாநில பொருளாளர் வழக்கறிஞர் சீனிவாசன் வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் பிரச்சாரத்தை துவக்கினார். முதன் முதலில் பீமாபள்ளி வார்டில் (76-வது வார்டு) அ.தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிடும் ஈஸாக்கை ஆதரித்து திறந்த வேனில் நின்று, ஹெல்மெட் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு, தமிழ்மகன் உசேன் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி வைத்து இஸ்லாமிய தெரு வீதிகளில் வாகன ஊர்வலமாக சென்று அஸ்ஸலாமு அலைக்கும் சொல்லி வாக்குகள் சேகரித்தார்.  

பிரச்சாரத்தில் கேரள மாநிலக் கழக செயற்குழு உறுப்பினர் ஹரிபாபு, திருவனந்தபுரம் மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவர் சாகுல் ஹமீது, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றப் பொருளாளர் எஸ்.எம். பிள்ளை, கேரளா மாநில பொதுக்குழு உறுப்பினர் கே. ராமர், தேர்தல் கன்வீனர்கள் ஸ்ரீகுமார், ஜோதீஷ் கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். மேலும்  சபாபதி கோவில் தெருவில் சாலை வார்டு (71-வது வார்டு) தேர்தல் பணிமனையை, மாநில அ.தி.மு.க. செயலாளர் சோபகுமார் தலைமையில் டாக்டர் தமிழ்மகன் உசேன் திறந்து வைத்து, வேட்பாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து