முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமையல் மற்றும் வர்த்தக கேஸ் சிலிண்டர்களின் விலை உயர்வு

புதன்கிழமை, 2 டிசம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்ந்துள்ளது. இந்நிலையில் ரூ. 610-க்கு விற்பனை செய்யப்ப்ட் சிலிண்டர் தற்போது ரூ. 660-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இந்தியாவில் வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்களின் விலை மாதம் ஒருமுறை நிர்ணயிக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.

கடந்த சில மாதங்களாக கொரோனா காரணமாக மத்திய அரசின் சமையல் எரிவாயு திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கப்பட்டு வந்தது. சர்வதேச சந்தையில் எரிவாயு விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் விலையேற்றம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் வரை ரூ. 610 ஆக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இந்த மாதம் ரூ. 50 உயர்ந்து ரூ. 660 ஆக உள்ளது. மேலும் வர்த்தக பயன்பாட்டுக்கான எரிவாயு விலை ரூ. 62 அதிகரித்துள்ளது. விலை உயர்வுக்கு பின் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 1,293-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து