ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் டி.ஆர்.எஸ். கட்சி முன்னிலை

வெள்ளிக்கிழமை, 4 டிசம்பர் 2020      இந்தியா
Cantiracekararav 2020 11 08

Source: provided

ஐதராபாத் : ஐதராபாத் மாநகராட்சியில் பா.ஜ.க. வேட்பாளர்கள் முதலில் அதிக எண்ணிக்கையில் முன்னிலை பெற்ற நிலையில், பிற்பகல் டி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர்கள் அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்ற ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கும் (டி.ஆர்.எஸ்), பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. இந்நிலையில், ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. மொத்தம் 30 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்பட்டன. 

ஆரம்பத்தில் பா.ஜ.க. அதிக இடங்களில் முன்னிலை பெறத் தொடங்கியது. இரண்டாவது இடத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி இருந்தது. 11 மணி நிலவரப்படி பா.ஜ.க. 88 வார்டுகளிலும், டி.ஆர்.எஸ். 32 வார்டுகளிலும் முன்னிலையில் இருந்தது. எ.ஐ.எம்.ஐ.எம். கட்சி 17 வார்டுகளில் முன்னிலை பெற்றிருந்தது. 

பிற்பகல் 2 மணி நிலவரப்படி இந்த முன்னணி நிலவரத்தில் மாற்றம் ஏற்பட்டது. டி.ஆர்.எஸ். கட்சி கூடுதல் இடங்களில் முன்னிலை பெறத் தொடங்கியது. அதேசமயம் ஊடகங்களில் மாறுபட்ட தகவல்களும் வெளியாகின. இவ்வாறு மாறுபட்ட தகவல் வெளியாகியதால் வெற்றி நிலவரத்தை உறுதியாக கணிக்க முடியாத நிலை ஏற்பட்டது.  4 வார்டுகளில் ஏ.ஐ.எம்.ஐ.எம். வெற்றி பெற்றிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து