முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை, செங்கல்பட்டு, தருமபுரி மாவட்டங்களில் ரூ. 300 கோடியில் 18 துணை மின் நிலையங்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 7 டிசம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னை, செங்கல்பட்டு, தருமபுரி மாவட்டங்களில் ரூ. 300 கோடியில் 18 துணை மின் நிலையங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். மேலும் திருச்சியில் ரூ. 5¼ கோடி செலவில் தலைமைப் பொறியாளர் அலுவலகக் கட்டிடத்தையும் முதலமைச்சர் எடப்பாடி திறந்து வைத்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச்செயலகத்தில், எரிசக்தித் துறையின் சார்பில் திருப்பத்தூர் மாவட்டம் – நாட்டறம்பள்ளியில் 21 கோடியே 86 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 110/33 கி.வோ. துணை மின் நிலையத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

மேலும் 278 கோடியே 9 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 17 துணை மின் நிலையங்கள் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் சார்பில் திருச்சியில் 5 கோடியே 22 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலைமை பொறியாளர் (மின் தொடரமைப்பு திட்டங்கள்) அலுவலகக் கட்டிடத்தையும் திறந்து வைத்தார்.

மின்பாதையில் ஏற்படுகின்ற மின் இழப்பையும், மின்பராமரிப்பு செலவினங்களையும் குறைத்து, ஒவ்வொரு பகுதிக்கும் தேவைப்படுகின்ற உச்சகட்ட மின் தேவையை நிறைவு செய்யும் வகையில், சரியான மின் அழுத்தத்துடன் சீரான மின்சாரம் மக்களுக்கு வழங்கிட கூடுதல் துணை மின் நிலையங்கள் அமைப்பது அவசியமாகும் என்பதைக் கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையங்களை அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு அமைத்து வருகிறது.

அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டம் – நாட்டறம்பள்ளியில் 21 கோடியே 86 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 110/33 கி.வோ. துணை மின் நிலையத்தை முதலமைச்சர் நேற்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

சமயநல்லூரில் :-

மேலும் மதுரை மாவட்டம் – சமயநல்லூரில் 94 கோடியே 44 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒரு 230/110 கி.வோ. துணை மின் நிலையம், கடலூர் மாவட்டம் – மேலப்பாலையூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டம்- தேனூர் (தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையம்) ஆகிய இடங்களில் 24 கோடியே 2 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டு 110/33 கி.வோ. துணை மின் நிலையங்கள்,

கோயம்புத்தூர் மாவட்டம் – சின்னதடாகம் மற்றும் க.க.சாவடி மற்றும் விழுப்புரம் மாவட்டம் – கெடார் ஆகிய இடங்களில் 38 கோடியே 38 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான மூன்று 110/22 கி.வோ. துணை மின் நிலையங்கள்,

சென்னை மாவட்டம் -பள்ளிக்கரணை, செங்கல்பட்டு மாவட்டம்- திருமணி, தருமபுரி மாவட்டம் – இலக்கியம்பட்டி மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் – இ.டி.ஏ. ஸ்டார் சிட்டி மாம்பாக்கம் ஆகிய இடங்களில் 73 கோடியே 7 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான நான்கு 110/11 கி.வோ. துணை மின் நிலையங்கள்,

நீலகிரி மாவட்டம் -ஜெகதளா மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் -கீரமங்கலம் ஆகிய இடங்களில் 16 கோடியே 22 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டு 110/33 கி.வோ. துணை மின் நிலையங்கள் (விகிதாசார அறிமுகம்),

செங்கல்பட்டு மாவட்டம் – காயரம்பேடு மற்றும் கோவிந்தாபுரம், திருவள்ளூர் மாவட்டம் – வைகை காலனி, திருவண்ணாமலை மாவட்டம் -பனைஓலைப்பாடி மற்றும் திருநெல்வேலி மாவட்டம் – விஜயாபதி ஆகிய இடங்களில் 31 கோடியே 94 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான ஐந்து 33/11 கி.வோ. துணை மின் நிலையங்கள்,

என மொத்தம் 299 கோடியே 96 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 18 துணை மின் நிலையங்களை முதலமைச்சர் நேற்று திறந்து வைத்தார்.

மேலும், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் சார்பில் திருச்சியில் 5 கோடியே 22 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தலைமை பொறியாளர் (மின் தொடரமைப்பு திட்டங்கள்) அலுவலகக் கட்டடத்தையும் முதலமைச்சர் நேற்று திறந்து வைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து