முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மீது புகார்

புதன்கிழமை, 9 டிசம்பர் 2020      சினிமா
Image Unavailable

Source: provided

சென்னை : சம்பளப் பிரச்சினையில் அலுவலகப் பணிப்பெண்களை வீட்டில் அடைத்து வைத்ததாக பிரபல நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

புஷ்பவனம் குப்புசாமி, ராஜா அண்ணாமலைபுரம், பாகிரதி தெருவில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் கீழ் தளத்தில் புடவைகள், சோப்பு, ஊதுபத்திகள், அழகுசாதன பொருட்களை விற்பனை செய்யும் ‘விகா ஆன்லைன் ஷாப்பிங்’ என்ற பெயரில் அங்காடி உள்ளது. இந்த அங்காடியில் உள்ள பொருட்களை ‘பேக்கிங்’ செய்வதற்கு மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தைச் சேர்ந்த ஜெயந்தியின் 2 மகள்களும் அதே பகுதியைச் சேர்ந்த மேலும் 2 பெண்களும் சேர்ந்துள்ளனர். மாதம் ரூ. 8,000 சம்பளம், விடுமுறை தினமான ஞாயிற்று கிழமைகளில் பணி புரிந்தால் ரூ. 300 சம்பளமாக அன்றைய தினத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என புஷ்பவனம் குப்புசாமியின் மகள் பல்லவி தெரிவித்தால் ஜெயந்தியின் 2 மகள்களும் பணிக்கு சென்றுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பேசியபடி ரூ. 300 பணத்தை ஜெயந்தியின் மகள்கள் கேட்டதற்கு ரூ. 200 மட்டுமே கொடுத்துள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்த அவர்கள் தகராறு செய்துவிட்டு பின் திங்கள் கிழமை அன்று திரும்பி இருக்கிறார்கள். அப்போது அவர்களை புஷ்பவனம் குப்புசாமி, அவரது மனைவி அனிதா குப்புசாமி, மற்றும் பல்லவி ஆகிய மூவரும் தங்களது அடைத்து வைத்தார்களாம். இது தொடர்பாக அந்த பெண்கள் செல்போனில் தங்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து அபிராமபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சென்று விசாரணை நடத்தினர். இரு தரப்பையும் சமாதானப்படுத்தி, இரு பெண்களையும் மீட்டு பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து