நடிகர் ரஜினிக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய உள்ளதாக தகவல்

வியாழக்கிழமை, 24 டிசம்பர் 2020      சினிமா
rajinikanth-2020 12 24

நடிகர் ரஜினிகாந்துக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐதராபாத்தில் நடைபெற்ற அண்ணாத்த படப்பிடிப்பு குழுவில் 4 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அதனைதொடர்ந்து ரஜினிகாந்துக்கும், மற்ற படக்குழுவினருக்கும் பரிசோதனையில் தொற்று இல்லை என்று தெரிய வந்தது.  இருப்பினும் நடிகர் ரஜினிகாந்துக்கு தொற்று இல்லை என்றாலும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இதர நடிகர், நடிகைகளும் தனிமைப்படுத்திக் கொண்டனர். மேலும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து