முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டா : தமிழக அரசின் முடிவிற்கு கமல்ஹாசன் வரவேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

கோவை :  சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெற்றிநடை போடும் தமிழகம் என்ற பெயரிலும், மு.க.ஸ்டாலின் மக்கள் கிராம சபை கூட்டங்களிலும் பங்கேற்று பேசி வருகின்றனர். 

அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடந்த டிசம்பர் 13-ந் தேதி மதுரையில் தனது பிரசாரத்தை தொடங்கினார். இதுவரை 4-கட்டமாக பிரசாரம் நடத்தி முடித்துள்ள கமல்ஹாசன் 5-வது கட்டமாக கோவையில் நேற்று மாலை தனது பிரசாரத்தை தொடங்கினார்.

இதற்காக பிற்பகல் 3 மணியளவில் சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த கமல்ஹாசனுக்கு கட்சி நிர்வாகிகள் சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நிருபர்களுக்கு கமல்ஹாசன் பேட்டியளித்தார். 

அப்போது அவர் கல்லூரி மாணவர்களுக்கு இலவச டேட்டா வழங்கும் தமிழக அரசின் முடிவை தான் வரவேற்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து