முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் 6077 கட்டுமான தொழிலாளர்கள் - ஓய்வுதியதாரர்களுக்கு முதன்முறையாக பொங்கல்பரிசு தொகுப்பினை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : மதுரையில் 6077 கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஒய்வுதியதாரர்களுக்கு முதன் முறையாக பொங்கல் பரிசுத்தொகுப்பினை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று வழங்கினார்.

மதுரை மாவட்டம் மெகபூப்பாளையம் செவன்த் டே மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள்நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 6077 கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்குமுதன் முறையாக தைப் பொங்கல் திருநாளையொட்டி பொங்கல் பரிசுத் தொகுப்பினை மாவட்ட  கலெக்டர் .அன்பழகன் தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

தமிழ்நாட்டில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 2021 - ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்புவழங்குவதற்கு 560484 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 20773665 மொத்த குடும்பஅட்டைதாரர்களில் 01.01.2021 மாலை 5 மணி வரை 19257683 குடும்ப அட்டைதாரர்களுக்கு என  92.70 சதவிகிதம் வழங்கப்பட்டுள்ளது.கட்டுமானத தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 1269550 கட்டுமானத்தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முதன்முறையாக தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டுவேட்டி அங்கவஸ்திரம் (ஆண்களுக்கு) சேலை (பெண்களுக்கு) பச்சரிசி 2கிலோ சிறு பருப்பு 1கிலோ எண்ணெய் 500 கிராம் நெய் 100 கிராம் வெல்லம் 1கிலோ ஏலக்காய் முந்திரிதிராட்சை ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் 08.01.2021 அன்றுதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் துவக்கி வைக்கப்பட்டு இதற்காக ரூ.94.40 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பேரிடர் காலத்தில் கட்டுமான தொழிலாளர் வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு இரண்டுமுறை தலா ரூ. 1000 15 கிலோ அரிசி 1 கிலோ எண்ணெய் 1 கிலோ பருப்பு வழங்கப்பட்டது. மதுரைகட்டுமானத தொழிலாளர் நல வாரியத்தில் 34859 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்குவழங்கப்பட உள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பின் மதிப்பு ரூ .24227005 ஆகும்

தமிழ்நாட்டில் 17 அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்கள் உள்ளன. கடந்த 30.12.2020அன்று தமிழ்நாடு முதலமைச்சர்  பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலன்கருதி பாட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிப்பு தொழிலாளர்களுக்கான அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியம் அமைக்க ஆணையிட்டுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள 1250 பட்டாசு தொழிற்சாலை மற்றும் 870 தீப்பெட்டி தொழிற்சாலைகளில் உள்ள 120000 தொழிலாளர்கள் பயன்பெறுவர்.முதலமைச்சர் எடப்பாடியார் ஒரு நண்பனை போல நமக்கு துன்பம் நேரும் போது நமக்கானதிட்டங்களை செயல்படுத்துகிறார். கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திகொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததற்காக பாரத பிரதமர்  நமதுமுதலமைச்சரை பாராட்டியுள்ளார். 7.5 சதவிகித் உள் ஒதுக்கீடு வழங்கி ஏழை எளிய 313 அரசு பள்ளிமாணவ மாணவியரின் மருத்துவ கனவை நனவாக்கியுள்ளார். மேலும் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள்துவங்கப்பட்டு மருத்துவ படிப்பு எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் தான் அதிகமான மருத்துவகல்லூரிகள் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. கூட்டுறவுத்துறை இரண்டு முறை ஜனாதிபதி விருதும்மேலும் 29 முறை தேசிய அளவிலான விருதுகளும் பெற்றுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் துறை கூடுதல் ஆணையாளர் டி.குமரன் அவர்கள் இணை ஆணையாளர்பி.சுப்பிரமணியன் உதவி ஆணையாளர் மைவிழிச்செல்வி மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் எம்.எஸ்.பாண்டியன், வில்லாபுரம் ஜெ.ராஜா, மாணவரணி பா.குமார், கு.திரவியம், கார்னர் பாஸ்கர், தளபதி மாரியப்பன், ஜெயபாண்டி, ஷோபியா பிச்சை மணி, அப்துல்காதர், விக்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து