முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விழா: முகூர்த்தக்கால் நட்டார் : அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா என்பது தென் மாவட்டங்களில் உள்ள மாடுபிடி வீரர்களும், காளையை வளர்ப்பவர்களும் இதில் பங்கு பெறுவதை தங்களின் கௌரவமாக கருதுவார்கள். கடந்த தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இந்த ஜல்லிக்கட்டு உரிமை பறிபோனது. அப்பொழுது ஒட்டுமொத்த மக்களும் திரண்டு மிகப்பெரிய போராட்டம் செய்தனர் அதனைத் தொடர்ந்து அம்மாவின் அரசு மத்திய அரசுடன் போராடி வலியுறுத்தி இழந்த உரிமையை மீட்டுத் தந்தது.

அதனைத் தொடர்ந்து 16.1.2018 அன்று அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவை முதல்வரும்,  துணை முதல்வரும் கொடியசைத்து துவக்கி வைத்தனர். தற்போது இப்பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் வருகின்ற 16-ம் தேதி ஜல்லிக்கட்டு விழாவை தொடங்கி வைக்க அவர்கள் வருகை தருகின்றனர் இதனைத் தொடர்ந்து முதல்வரையும், துணை முதல்வரையும் வரவேற்க இப்பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களில் இருக்கும் இளைஞர்களும் ,விவசாயிகளும், ஊர் பெரியவர்களும் அணிதிரண்டு வரவேற்க தயாராக உள்ளனர். 

இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கான பந்தகால் நடும் விழா அலங்காநல்லூரில் உள்ள ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் நடைபெற்றது 

இந்த பந்தக்கால் பணியை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் துவக்கி வைத்தார் .இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கே மாணிக்கம், காவல்துறை கண்காணிப்பாளர் திரு.சுஜித்குமார் , மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி , வருவாய் கோட்டாட்சியர்.முருகானந்தம் , உதவி இயக்குநர் பேரூராட்சிகள் .சேதுராமன் , உதவி இயக்குநர் ஊராட்சிகள் .செல்லதுரை , வட்டாட்சியர் பழனிக்குமார் ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன், பேரூர் கழகச் செயலாளர்கள் அழகுராஜா, குமார் உட்படபலர் கலந்து கொண்டனர் .

அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியதாவது:-

தாய் தமிழ்நாட்டின் தமிழ் சமுதாயத்தினுடைய வீரத்தின் அடையாளமாக , பாரம்பரியத்தின் அடையாளமாக மற்றும் பண்பாட்டின் அடையாளமாக இருக்கின்ற உலகப்புகழ் பெற்ற வரலாற்று சிறப்புமிக்க அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டினை தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் தங்களது பொற்கரங்களால் துவக்கி வைக்க வருகை தரவுள்ளார்கள் . 

இந்தியாவில் இதுவரை நிகழ்ந்திராத தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு ரூ .2500 ரொக்கம் , ஒரு முழுநீள கரும்பு , வேட்டி , சேலை , அரிசி , சர்க்கரை , முந்திரி , உலர் திராட்சை மற்றும் ஏலக்காய் உள்ளிட்ட சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி வரலாற்றை படைத்திருக்கிறார் முதலமைச்சர் .

அவனியாபுரம் , பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கான அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது அதைத் தொடர்ந்து இந்த மூன்று பகுதிகளைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு விழா குழுவினர் தங்களது நன்றியினை தெரிவித்து முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் அழைப்புதழ்களை வழங்கினர். அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் கடந்த 2 ஆண்டை போலவே இந்தாண்டும் கழக அம்மா பேரவை சார்பில் முதலமைச்சரின் பெயரில் சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசாகவும், சிறந்த காளைக்கு துணை முதலமைச்சர் பெயரில் ஒரு கார் பரிசாகவும் வழங்கப்படுகிறது.

ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயமும் , தமிழ்ச் சமுதாயமும், விவசாய பெருமக்களும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை துவக்கி வைக்க வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர் , துணை முதலமைச்சரையும்  வரவேற்க தயாராக உள்ளது . காலை 8.00 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டியானது துவக்கி வைக்கப்படும் . மாவட்ட நிர்வாகம் , காவல்துறை , மக்கள் நல்வாழ்வுத்துறை , கால்நடைத்துறை , பொதுபணித்துறை , உள்ளாட்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன . மருத்துவ தகுதியின் அடிப்படையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 430 வீரர்களும் , பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க 651 வீரர்களும் , அலங்காநல்லூ ஜல்லிக்கட்டில் பங்கேற்க 655 வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் . 

மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வாடிவாசல் முதல் காளைகள் சேகரிக்கும் இடம் வரை தடுப்பு வேலிகள் அமைக்கப்பட உள்ளது . குடிநீர் வசதி , கழிப்பறை வசதி , வாகன நிறுத்தம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளன . இவ்வருடம் தனிமனித இடைவெளியோடு பார்வையாளர்கள் இருக்கைகள் அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது 

ஜல்லிகட்டு நேரத்தில் மழை பெய்தாலும் கூட காளைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறோம்அயல்நாட்டு பயணிகள் வருவார்களா என்பது தெரியவில்லை வைரஸ் தொற்று இருக்கிற காரணத்தினால்  தை மாதம் அல்ல மாசி பிறந்தாலும் பங்குனி பிறந்தாலும் எந்த மாதம் பிறந்தாலும் தி.மு.க.வுக்கும், ஸ்டாலினுக்கும் நல்லவழி பிறக்காது.  தற்போதைய அரசே தொடரும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை மக்களும் அதற்கு தயாராக உள்ளனர் .

திட்டங்களை தமிழகத்திற்கு தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்து வருகிறார் 11 மருத்துவ கல்லூரிகளை தொடங்கி வைத்துள்ளார் இங்கு தடையின்றி மின்சாரம் கொடுத்து வருகிறோம்அத்தனை திட்டங்களையும் மறைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கிறார்கள் ஆனால் அது முடியவே முடியாது நீர் நிலைகள் நிரம்பி உள்ளது அதற்கு முக்கிய காரணம் குடிமராமத்து பணிகள்சிறந்த நிர்வாகம் என்று உள்துறை அமைச்சரே சொல்லியுள்ளார் 

கெடுவான் கேடு நினைப்பான் என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் திமுகவினர் கேடு நினைக்கிறார்கள் அவர்கள் கெட்டுப் போவார்கள் நாங்கள் நல்லதை நினைப்போம் நல்லாவே இருப்போம்   மன நோயாளி போல உதயநிதி ஸ்டாலின் புலம்பிக் கொண்டே இருக்கிறார். அவர் பெண்களை அவதூறாக பேசி வருகிறார் அது நிச்சயமாக கண்டிக்கத்தக்கதாகும்.  மேடை நாகரீகம் மைக்கில் பேசும் போது நாகரீகம் என்பது தெரிந்திருக்க வேண்டும். உத்தம புத்திரன் போல உதயநிதி ஸ்டாலின் பேச வேண்டாம் அரசியல் சாக்கடை என்பதே உங்களது குடும்பம் தான்.  உதயநிதி ஸ்டாலின் பேச்சு தமிழகத்தில் எடுபடாது என்று கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து