முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியாக கார் ஓட்டினால் முகக் கவசம் கட்டாயம் இல்லை: மத்திய அரசு தகவல்

திங்கட்கிழமை, 11 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

தனியாக கார் ஓட்டிச்செல்லும்போது முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்தது.

டெல்லியில் சவுரப் சர்மா என்ற வக்கீல் தனியாக கார் ஓட்டிச்சென்றபோது முக கவசம் அணிந்திருக்கவில்லை என்று தெரிகிறது. இதற்காக அவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

இதற்கு எதிராகவும் தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியமைக்காக ரூ.10 லட்சம் இழப்பீடு கேட்டும் அவர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.

ஆனால் டெல்லி தொற்று நோய்கள் (கொரோனா மேலாண்மை) சட்டம், 2020 படி, கொரோனா கால விதிமுறைகளை மீறுவோருக்கு முதல் முறை ரூ.500, மீண்டும் மீறினால் ரூ.1000 அபராதம் விதிக்க முடியும். இதனால் எல்லா பொது இடங்களிலும் பணியிடங்களிலும் முக கவசம் அணிவது கட்டாயம் ஆகும்.

டெல்லி ஐகோர்ட்டில் வக்கீல் சவுரப் சர்மா இதை சுட்டிக்காட்டி வாதிடுகையில் பொது இடங்களிலும், பணியிடங்களிலும்தான் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று விதிமுறை சொல்கிறது என கூறினார்.

இந்த வழக்கில் மத்திய சுகாதார அமைச்சகம் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சுகாதார அமைச்சகம், சுகாதாரம் என்பது மாநில விவகாரம். அதன் அடிப்படையில் தற்போது இந்த வழக்கு டெல்லி அரசாங்கத்தை பற்றியது. எனவே மத்திய சுகாதார அமைச்சகத்தை ஒரு தரப்பாக சேர்த்து இருப்பதை நீக்க வேண்டும் என்று கோரியது.

மேலும் ஒருவர் தனியாக கார் ஓட்டிச்செல்கிறபோது முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும் கூறி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து