முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்ய முடியாது: தீர்மானத்தை நிராகரித்த துணை அதிபர்

புதன்கிழமை, 13 ஜனவரி 2021      உலகம்
Image Unavailable

அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை துணை அதிபர் மைக் பென்ஸ் நிராகரித்தார். 

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், வரும் 20-ம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ளார். அவரது வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நடைமுறைகளை தடுக்கும் வகையில், டிரம்பின் ஆதரவாளர்கள் கடந்த 6-ம் தேதி பாராளுமன்றத்தில் நுழைந்து  வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த வன்முறையை உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டித்தனர்.

பாராளுமன்றத்தில் வன்முறையை தூண்டி விட்ட டிரம்பை பதவி நீக்கம் செய்து வெளியேற்றுவதற்கான முயற்சிகள் தொடங்கின. இதற்காக பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சியினர் தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  டிரம்பை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை துணை அதிபர் மைக் பென்ஸ் நிராகரித்துள்ளார். பதவி நீக்கம் செய்வதற்கான 25-வது திருத்தத்தை பயன்படுத்த அவர் மறுத்து விட்டார். தனது முடிவை பாராளுமன்ற தலைவர் நான்சி பெலோசிக்கு கடிதம் மூலம் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து