கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்: புதிதாக 7 பேர் பதவியேற்பு

புதன்கிழமை, 13 ஜனவரி 2021      இந்தியா
Yeddyurappa 2021 01 10

Source: provided

பெங்களூர் : கர்நாடகத்தில் அமைச்சரவை விரிவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் புதிதாக 7 அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த முதல்வர் எடியூரப்பா அமைச்சரவை விரிவாக்கப்படும் எனத் தெரிவித்தார்.

ந்நிலையில் நேற்று பிற்பகல் கவர்னர் மாளிகையில் எம்.டி.பி.நாகராஜ், உமேஷ் கட்டி, அரவிந்த் லிம்பாவலி, முருகேஷ் நிரணி, ஆர்.சங்கர், சிபி யோகேஸ்வர், அங்காரா எஸ் ஆகிய 7 பேருக்கு கர்நாடக கவர்னர் வாஜுபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் கலந்து கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து