முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சர் ஸ்ரீபாதநாயக் உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை நிர்வாகம் தகவல்

வெள்ளிக்கிழமை, 15 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

பனாஜி : கார் விபத்தில் காயமடைந்த மத்திய அமைச்சர் ஸ்ரீபாதநாயக் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மத்திய அமைச்சரவையில் ராணுவ இணை அமைச்சராகவும், தனிப்பொறுப்புடன் ஆயுஷ் துறை அமைச்சராகம் ஸ்ரீபாத யசோதா நாயக் பதவி வகித்து வருகிறார். 

கோவா மாநிலத்தை சேர்ந்த அவர், கடந்த திங்கட்கிழமை கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, ஒரு காரில் திரும்பி கொண்டிருந்த போது, அவரது கார் விபத்தில் சிக்கியது. இதில், ஸ்ரீபாதநாயக் படுகாயம் அடைந்தார். அவருடைய மனைவியும், உதவியாளரும் விபத்தில் பலியானார்கள். 

மத்திய அமைச்சர் ஸ்ரீபாதநாயக், கோவா மாநில தலைநகர் பனாஜியில் உள்ள கோவா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இந்த நிலையில், மத்திய மந்திரி ஸ்ரீபாதநாயக் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அவரது இரத்த அழுத்தம் சீராக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து