முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஞானதேசிகன் மறைவுக்கு மதுரை ஆதீனம் இரங்கல்

வெள்ளிக்கிழமை, 15 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் மறைவுக்கு மதுரை ஆதீனம் இரங்கல் தெரிவித்துள்ளார். 

மதுரை ஆதீனம் 292-வது குருமகா சன்னிதானம் அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஜி.கே. மூப்பனாரின் மீது பற்றுதல் கொண்டவரும், அவரது தீவிர ஆதரவாளராகவும் விளங்கிய முன்னாள் ராஜ்யசபை உறுப்பினரும், த.மா.கா. மூத்த தலைவருமான பி.எஸ். ஞானதேசிகன் தமிழ் மக்களின் தேவை அறிந்து நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்தவர். 

அவர் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்தோம். அவரது ஆன்மா எல்லாம் வல்ல இறைவனின் சன்னதியில் நிம்மதியுடனும், மகிழ்வுடனும் வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து