முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலமேடு ஜல்லிக்கட்டில் 18 காளைகளை பிடித்து கருப்பாயூரணி கார்த்தி முதலிடம்

வெள்ளிக்கிழமை, 15 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை  உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று மாலை 5 மணியளவில் நிறைவுபெற்றது. 

மதுரையில் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி தமிழக அரசின் விரிவான கொரோனா தடுப்பு வழிகாட்டுதலுடனும், பல்வேறு கட்டுப்பாடுகளுடனும் தொடங்கியுள்ளது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கி வைத்தார். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 651 மாடுபிடி வீரர்கள், 800 காளைகள் களம் கண்டன.

ஜல்லிக்கட்டில் வெல்லும் காளைகள், வீரர்களுக்கு கார், கட்டில், சைக்கிள், இரு சக்கர வாகனம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.  ஜல்லிக்கட்டு போட்டியைக் காண பார்வையாளர்கள் உடல் வெப்ப பரிசோதனைச் செய்யப்பட்டு தனிமனித இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. 

இதனையடுத்து, பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று  மாலை 5 மணியளவில் நிறைவுபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 18 காளைகளை பிடித்து வீரர் கருப்பாயூரணி கார்த்தி முதலிடம் பிடித்தார். 17 காளைகளை பிடித்து மாடுபிடி வீரர் பிரபாகரன் 2-வது இடம் பிடித்தார்.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 674 காளைகள் அவிழ்க்கப்பட்டது. இந்த நிலையில் முதலிடம் பிடித்த மாடுபிடி வீரர் கருப்பாயூரணி கார்த்தி கூறுகையில், இது எனது வெற்றி அல்ல, நம் எல்லோருடைய வெற்றி என்று நெகிழ்ச்சியாக தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து