ஞானதேசிகன் மறைவு: இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இரங்கல்

வெள்ளிக்கிழமை, 15 ஜனவரி 2021      தமிழகம்
EPS OPS 2020 11 08

Source: provided

சென்னை : தமிழ் மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஞானதேசிகன் மறைவுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, 

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரும், பாராளுமன்ற மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான பி.எஸ். ஞானதேசிகன் உடல்நலக்குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்திகேட்டு மிகுந்த வருத்தமுற்றோம். நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட ஞானதேசிகன் தனது பண்பாலும், பணிவாலும் பலருடன் நல்ல நட்பை பேணி வளர்த்து வந்தவர்.

அவரது மறைவு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அன்பு சகோதரர் ஞானதேசிகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் இந்த துயரத்தை தாங்கி கொள்ளக் கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்க வேண்டும் என்றும் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெறவும் எல்லாம் வல்லஇறைவனை பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து