முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அமைதிக்கு துணை நிற்கும் போலீசார், குடும்பத்திற்கு அம்மாவின் அரசு துணை நிற்கும்: எடப்பாடி பழனிசாமி உறுதி

வெள்ளிக்கிழமை, 15 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழ்நாட்டின் அமைதிக்கு துணை நிற்கும் போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு என்றென்றும் அம்மாவின் அரசு துணை நிற்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று முன் தினம் சென்னை புனித தோமையார் மலை, ஆயுதப் படை வளாகத்தில் காவலர்களின் குடும்பத்தினருடன் நடைபெற்ற தைப்பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:–

சாதி, மத வேறுபாடுகளை கடந்து அனைத்து தமிழர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்தத் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இந்த இனிய தருணத்தில் எனது ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்களைக் கூறுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

அமைதி, வளம், வளர்ச்சி என்ற முப்பெரும் கோட்பாடுகளை அம்மா நமக்கு வழங்கினார். அந்த வழியில், அம்மாவின் அரசும் இன்றைக்கு பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டு, நாட்டிற்கே முன்னுதாரணமாக பல்வேறு விருதுகளைப் பெற்று வெற்றிநடை போட்டு வருகிறது. வெற்றிநடை போடும் தமிழகத்திற்கு அச்சாணியாக இருப்பது வீரநடை போடும் தமிழ்நாடு காவல் துறை என்றால் அது மிகையல்ல. தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்வதற்கு காவல் துறையின் பங்களிப்பு அளப்பறியது. எனவே தான், காவல் துறையினருக்கு அம்மாவும், அவரைத் தொடர்ந்து என் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அம்மாவின் அரசும் பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். காவலர் வீட்டுவசதி வாரியத்தைத் துவக்கி காவலர்களுக்கு வீட்டுவசதி ஏற்படுத்திக் கொடுத்தார்.

புரட்சித்தலைவி அம்மா காவலர் முழு உடல் பரிசோதனைத் திட்டம், உங்கள் சொந்த இல்லத் திட்டம், தமிழ்நாடு காவலர் சிறப்பு அங்காடிகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தார். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தை உருவாக்கினார். பெண் காவலர்களுக்கு பேறுகால விடுப்பை உயர்த்தினார். மேலும், காவலர்களின் உடல்நலம் மட்டும் பாதுகாக்கப்பட்டால் போதாது என்று எண்ணி, என் தலைமையில் அமைக்கப்பட்ட அம்மாவின் அரசு, இந்தியாவிற்கே முன்னோடியாக காவலர் நிறைவான பயிற்சி என்ற மனநலம் காக்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. அதேபோல, காவல் துறையின் பணிகள் சிறக்க நான்காவது போலீஸ் கமிஷன் அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இன்றைய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள காவல் துறை நவீனப்படுத்தப்பட்டுள்ளது.

காவல் ஆளிநர்களின் மிகைநேரப் பணிகளுக்கான மதிப்பூதியம் 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்க நான் ஆணையிட்டுள்ளேன். காவல் துறையிலுள்ள காலிப் பணியிடங்கள் வெகுவாக நிரப்பப்பட்டு, காவல் துறை மேலும் சிறப்பாக செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அமைதிக்கு துணை நிற்கும் காவல் துறைக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் அம்மாவின் அரசு என்றென்றும் துணை நிற்கும் என்பதை இந்த நல்ல வேளையில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே நுழைகின்றபோது, ஒரு கிராமத்திலே நுழைந்தால் எப்படி இருக்குமோ அதுபோன்ற எண்ணம் இந்த அரங்கத்திற்குள் நுழைந்ததும் எனது மனதில் தோன்றியது. இன்று கிராமத்தில் எப்படி பொங்கல் திருவிழாவை குடும்பத்தோடு கொண்டாடினால் மகிழ்ச்சியோடு இருப்போமோ அதைப்போல இங்கே அரங்கிற்குள் இருக்கின்ற காவலர்கள் குடும்பத்தோடு இந்தத் திருவிழாவை கொண்டாடுகின்றபோது, எனக்கு கிராமம் தான் நினைவிற்கு வருகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். நமக்கெல்லாம் அந்தத் தை பிறந்திருக்கின்றது, நமக்கெல்லாம் வழி பிறக்கும் என்ற இனிப்பான செய்தியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அரங்கத்தினுள் நுழைகின்றபோது, இங்கே காவலர் குடும்பத்தோடு பொங்கல் வைக்கின்ற காட்சி, அதற்குப் பிறகு, போட்டிகள், அதற்குப் பிறகு கிராமச் சூழ்நிலையில் எப்படி இருக்குமோ அதைப்போல ஆடு, பசுமாடு, மாட்டு வண்டி, கிணறு, அருகில் இயற்கை அழகு நிறைந்த ஒரு குடிசை. தமிழக கிராமங்களில் எப்படி இந்தத் திருவிழாவை கொண்டாடுகிறோமோ அதேபோல, சென்னை மாநகரத்திலும் கிராமத்தையே கொண்டுவந்து இங்கே அமைத்த காவலர்களுக்கு எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைக்கு தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பதற்குக் காரணம் நம் காவலர்களுடைய திறம்படப் பணி, அர்ப்பணிப்பு உணர்வு. தமிழகம் இந்தியாவிலேயே அமைதிப் பூங்காவாக விளங்குவதற்கு அடித்தளமாக விளங்குபவர்கள் காவலர்கள். அப்படிப்பட்ட காவலர்களோடு, இன்றைக்கு இந்த தைப் பொங்கல் திருநாளை கொண்டாடுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் என்பதைத் தெரிவித்து மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த நிகழ்ச்சியை நல்ல முறையில் ஏற்பாடு செய்த காவல் துறை தலைமை இயக்குருக்கும் சென்னை மாநகர காவல் ஆணையாளருக்கும் அவரோடு இணைந்து பணியாற்றிய அனைத்து காவலர்களுக்கும் நன்றி.

இவ்வாறு எடப்பாடி பழனி்சாமி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து