முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜோ பைடன் 20-ம் தேதி பதவியேற்பு: வெள்ளை மாளிகையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

சனிக்கிழமை, 16 ஜனவரி 2021      உலகம்
Image Unavailable

 அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் 20-ம் தேதி பதவியேற்பதையொட்டி அமெரிக்காவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். இவர் அமெரிக்க அதிபராக வரும் 20-ம் தேதி பதவியேற்க உள்ளார். இதற்கிடையே கடந்த 6-ந் தேதி ஜோபைடனின் வெற்றியை உறுதி செய்து சான்றிதழ் அளிப்பதற்காக அமெரிக்க பாராளுமன்றம் கூடியது. அப்போது டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்குள் நுழைந்து பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த கலவரத்தில் போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த கலவரத்துக்கு டிரம்ப் காரணம் என்றும் அவர் தனது ஆதரவாளர்களை தூண்டியதாகவும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரத்தில் இணையதள பக்கங்களில் வெளியான தேர்தல் முடிவுகள் தொடர்பான அரசியல் ரீதியிலான விளம்பரங்கள் வன்முறைக்கு ஒரு காரணமாக இருந்தது.

இந்த நிலையில் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக பல கருத்துக்கள் சமூகவலைதளம் மூலம் பரவியது. இந்த விளம்பரங்கள் வன்முறை ஏற்பட காரணமாகவும் அமைந்தன. 

இந்நிலையில் ஜோ பைடன் வரும் 20-ம் தேதி பதவியேற்க உள்ள நிலையில் தங்கள் இணையதள பக்கங்களில் அரசியல் ரீதியிலான விளம்பரங்களை வெளியிட கூகுள் நிறுவனம் தற்காலிக தடை விதித்துள்ளது. இதனையடுத்து, அசம்பாவிதங்களை தவிர்க்க வெள்ளை மாளிகையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து