சென்னை அரசியல் ஆதாயத்திற்காக ராமாபுரம் தோட்ட இல்லத்திற்கு வரவில்லை என்றும் எம்.ஜி.ஆர். போட்ட அஸ்திவாரத்தில் எனக்கும் பங்கு உண்டு என்றும் கமல்ஹாசன் பேசினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் நேற்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் காலத்தை வென்றவன் என்ற ஆவணப் படத்தை கமல்ஹாசன் வெளியிட்டார். இதையடுத்து அவர் பேசியதாவது;-
அரசியல் ஆதாயத்திற்காக ராமாபுரம் தோட்ட இல்லத்திற்கு வரவில்லை. எம்.ஜி.ஆர் போட்ட அஸ்திவாரத்தில் எனக்கும் பங்கு உண்டு. எம்.ஜி.ஆரின் மீட்சி தான் நான்; விதை நான் போட்டது என்பது சிவாஜி வசனம் மட்டுமல்ல. அது எம்.ஜி.ஆருக்குமானதுதான்.
என் வாத்தியாரை நினைக்காமல் இருக்க முடியாது. இங்கு இருக்கும் அனைவருமே தமிழ் பேசும் திராவிடர்கள்தான். பட்டா போட்டே பழகியதால் எம்.ஜி.ஆர் எங்களுக்கு மட்டும் சொந்தம் என சிலர் கூறுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.