முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிக குறுகிய வனப்பகுதிகளில் செல்லும் பைக் ஆம்புலன்ஸ் : டெல்லியில் அறிமுகம்

திங்கட்கிழமை, 18 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

வனப்பகுதிகளில் மிக குறுகிய பாதைகளில் சென்று காயம் அடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்ல பைக் ஆம்புலன்ஸ் டெல்லியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இணைந்து உருவாக்கிய இந்த பைக் ஆம்புலன்ஸ் பாதுகாப்பு அவசரகால தேவைகளில் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சி.ஆர்.பி.எப். அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பதட்டமான பகுதிகளில் குறிப்பாக மாவோயிஸ்ட் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் துப்பாக்கிச் சண்டைகளின்போது மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால் குறுகிய பாதைகளில் வேகமாக செல்ல வேண்டிய அவசியத்தை பலமுறை சி.ஆர்.பி.எப். உணர்ந்துள்ளது.

மருத்துவ வசதிகள் சரியான நேரத்தில் கிடைக்காத நிகழ்வுகளும், மருத்துவ உதவிகளில் தாமதம் ஏற்பட்டதும் நோயாளிகளின் நிலைமையை மிகவும் சிக்கலானதாக ஆக்கியுள்ளன. அதன் விளைவாக இந்த பைக் ஆம்புலன்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்குகள் துப்பாக்கிச் சண்டையின்போது ஏதேனும் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் அவசர உதவி வழங்கும். இந்த பைக்குகள் பீஜப்பூர், சுக்மா, டான்டேவாடா போன்ற பகுதிகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் பெரிய வாகனங்கள் அல்லது ஆம்புலன்ஸ்களை வனப்பகுதிகளில் கொண்டு செல்வது கடினம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து