முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கு பாடத்திட்டம் குறைக்கப்படாது: மத்திய அமைச்சர் பொக்ரியால் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : 2021-ம் ஆண்டுக்கான நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படாது என்றும், முழுப் பாடங்களையும் மாணவர்கள் படிக்க வேண்டும் என்றும் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்க, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்கப்பட்டது. 10, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் மே 4-ம் தேதி தொடங்கி, ஜூன் 10-ம் தேதி முடிவடைகின்றன. செய்முறைத் தேர்வுகள் மார்ச் 1-ம் தேதி தொடங்குகின்றன. எனினும் விரிவான தேர்வுக் கால அட்டவணை இதுவரை வெளியிடப்படவில்லை.

இதற்கிடையே நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு, இயங்கி வருகின்றன. எனினும் மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. 

இதுகுறித்துக் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெபினாரில் கலந்துரையாடினார். இந்த நேரலை நிகழ்ச்சி அமைச்சரின் அதிகாரபூர்வ டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் ஒளிபரப்பப்பட்டது.

அதில் பேசிய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகள் மற்றும் பிற மாநிலங்களின் பொதுத் தேர்வுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே கேட்கப்படும். மாணவர்கள் அதை மட்டுமே படித்துத் தேர்வுக்குத் தயாரானால் போதுமானது.  எனினும் மருத்துவ மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளான நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படாது.

முழுமையான பாடத்திட்டத்தில் இருந்துதான் கேள்விகள் கேட்கப்படும்.  மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகள் விரைவில் திறக்கப்படும். மாணவர்களின் நலன் கருதி பள்ளி வகுப்புகளோடு ஆன்லைன் வகுப்புகள் வழியாகவும் கற்றல் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து