முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம், பேரணிக்கு தடை விதிக்க முடியாது: ஐகோர்ட் மதுரை கிளை மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : அரசியல் கட்சிகளின் பிரச்சாரம், பொதுக்கூட்டம், பேரணிக்கு தடை விதிக்க ஐகோர்ட் மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸின் 2-ம் அலையானது உலகம் முழுவதும் வேகமாக பரவி உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் வருகின்ற சட்டசபை தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி கூட்டங்கள், நிகழ்வுகள், பேரணிகள், பிரச்சாரங்கள் நிகழ்ந்து வருகிறது.

அதனால் கொரோனா வைரஸின் 2-ம் அலை பரவும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால் அதனை தடுக்கும் விதமாக சட்டசபை தேர்தலை முன்னிட்டு நடைபெறும் பிரச்சாரங்கள், கூட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே. ரமேஷ் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தமிழக அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

அரசியல் கட்சிகளின் பேரணி, பொதுக்கூட்டம் ஆகியவை உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடைபெற்று வருகிறது. ஆதனால் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம், பேரணி, பொதுக்கூட்டம் ஆகியவற்றிற்கு தடை விதிக்க முடியாது என தெரிவித்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து