முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைப்போம் : அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேச்சு

செவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 104 - வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பேச்சியம்மன் படித்துறையில் 81 வட்ட கழக செயலாளர் சக்தி விநாயகர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் துணைச் செயலாளர் தங்கம், பொருளாளர் வில்லாபுரம் ராஜா, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் எம்.எஸ். பாண்டியன். அண்ணாதுரை. மாணவரணி பா.குமார், தளபதி மாரியப்பன், கருப்புசாமி, சோலைராஜா, அரவிந்தன், சக்தி மோகன், கண்ணகி பாஸ்கரன், சுகந்தி அசோக், துர்கா ஜெயராமன், கார்த்திகேயன் தமிழ்ச்செல்வன் நவநீத கிருஷ்ணன், எம்.சிலம்பரசன், மூவர் பாலமுருகன் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த பொதுக்கூட்டத்தில் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ பேசியதாவது:-

எம்.ஜி.ஆர். இருக்கும்போது பிறந்தநாள் கொண்டாட வேண்டாம் என்றும், எனது பிறந்த நாளில் ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். நல்ல மனம்,நல்ல குணம் படைத்த ஒரே தலைவர் எம்.ஜி.ஆர். வரலாற்றைப் படைத்த ஒரே தலைவர் தான் பதித்த எல்லா இடங்களிலும் சாதனை படைத்து மன்னர் அவர் இருக்கும் வரை அவர்தான்.

தமிழக முதல்வர் அவர் மறைந்து 33 ஆண்டுகள் ஆன பின்னரும் இன்னும் ஒரு தலைவரை நாம் நினைத்துக்கொண்டு பேசுகிறோம் என்றால் அவர்தான் எம்.ஜி.ஆர்.எந்த அரசியல்வாதியும் எடுத்துக்கொண்டாலும் 33 வருடங்களாக எம்ஜிஆரின் சாதனைகளை சொல்லாமல் அவர்கள் அரசியல் பண்ண முடியவில்லை இந்த ரேஷன் கடைகள் 1964 - இல் நகர்ப்புறங்களில் மட்டும் தான் செயல்பட்டு வந்தன ஆனால் புரட்சித்தலைவர் காலத்தில்தான் கிராமப்புறங்களில் 1978 இல் புதிய ரேசன் கடைகளை 4444 நாட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தவர்  எம்ஜிஆர். இதுவரை தமிழ்நாட்டில் 32 லட்சத்துக்கு மேல் ரேஷன் கடைகள் மக்களின் பயன்பாட்டின் உள்ளன.

அம்மாவின் ஆட்சியில் பொங்கல் தொகுப்புகளை கொடுத்து இதுவரை இந்த வருடம் மட்டும் 2 கோடியே 4 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிவிட்டது. அம்மாவின் ஆட்சி இன்னும் 3 லட்சம் மூன்று லட்சம் பேருக்கு வழங்க வழங்க வேண்டும் 90 சதவீதம்  பொங்கல் பரிசு வழங்கப்பட்டு விட்டது.

இந்த 10 ஆண்டுகளில் நான் அமைச்சராக இருந்த காலங்களில் மக்களுக்கு செய்வதை சொன்னேன் செய்ய முடியாதது இல்லை என்றும் சொன்னேன் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட என்ற நினைத்த பேரறிஞர் அண்ணா தந்தை பெரியார் அண்ணல் காந்தியடிகள் பாரதியார் பாரதிதாசன் இவர்களின் கனவை நிலைநாட்டியவர் .எம்ஜிஆர். .அம்மா மட்டுமே பெண்களுக்கு உள்ளாட்சித் துறையில் 50 விழுக்காடும் 100 வார்டுகளில் 50 பெண்களுக்கும் 12 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தாலிக்கு தங்கம் 6000 கிலோ தாலிக்கு தங்கம் வழங்கிய அரசு அம்மாவின் அரசு ஒரு கிலோ 2 கிலோ கிடையாது 6,000 கிலோ வழங்கி அரசு புரட்சித்தலைவி அம்மாவின் அரசு தான் படித்த பெண்களுக்கு 25,000 ரூபாயும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் கொடுத்தது அம்மாவின் அரசு இந்த 10 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக்குழு 3 லட்சத்து 32 ஆயிரத்து 400 மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் பெண்கள் தனது வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளனர்நாங்கள் எவ்வளவு சாதனைகள் செய்து இருக்கிறோம் என்று நீங்கள் தி.மு. காவினஎ ண்ணிப்பார்க்க வேண்டும்.

இன்னும் முப்பத்தாறு மாதங்களில் எல்லா வீட்டுக்கும் குடிநீர் கிடைக்கும் 100 வார்டுகளில் கிடைக்கும் உங்கள் ஆட்சியில் மதுரைக்கு என்ன செய்தீர்கள் திமுக ஆட்சியில் தடையில்லாத மின்சாரம் கிடைத்ததா எப்பொழுதுமே மின்சாரம் எப்ப வரும் எப்ப போகும் என்று யாருக்கும் தெரியாது நாங்கள் எங்கள் சாதனையை பட்டியலிட தயார் தி.மு.க. கூட்டம் போட்டு தி.மு.க. செய்த சாதனைகளை பட்டியலிட தயாரா மக்கள் நீதிமான்கள் மக்கள்தான் எஜமானர்கள் மக்கள் மனம் போல் நடக்க வேண்டும் என்று புரட்சித்தலைவி எங்களுக்கு சொல்லி இருக்கிறார் அதேபோலதான் புரட்சித்தலைவரின் நூத்தி நாலாவது இந்த பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் எம்.ஜி.ஆரின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்று சபதம் ஏற்போம். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து