இந்தியாவில் புதிய வகை கொரோனாவால் பாதிப்படைந்தோர் 141 ஆக உயர்வு

செவ்வாய்க்கிழமை, 19 ஜனவரி 2021      இந்தியா
New corona 2021 01 04

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 141- ஆக உயர்ந்துள்ளது.

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய புதிய கொரோனா தொற்று இந்தியாவிலும் தொடர்ந்து பலரிடம் உறுதி செய்யப்பட்டு வருகிறது. அங்கிருந்து நாடு திரும்பியவர்களிடம் நடத்தப்படும் பரிசோதனைகளில் இது உறுதியாகிறது.  

இந்தியாவில் புதியவகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 141ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,  நாட்டில் புதியவகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 141ஆக அதிகரித்துள்ளது. 

புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த மாநில அரசுகளால் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து