முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி முருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழா: கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது

புதன்கிழமை, 20 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

பழனி : முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தைப்பூச திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை முத்துக்குமார சுவாமி வள்ளி-தெய்வானையுடன் தந்தப்பல்லக்கில் வீதியுலா வருகை தர உள்ளார். திருவிழாவின் 6-ம் நாளான 27-ந்தேதி இரவு 7.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 9.30 மணிக்குமேல் வெள்ளி ரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி 4 ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 

திருவிழாவின் 7-ம் நாளான 28-ந்தேதி காலை 10.30 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவில் கிழக்கு வாசலில் உள்ள திருத்தேருக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் தேரேற்ற நிகழ்ச்சியும், மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலுடன் தேரோட்டமும் தொடங்குகிறது. 

அதைத்தொடர்ந்து தேர் நிலை வந்து சேர்ந்த பின் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி தேர்க்கால் பார்த்தல், ரதவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து