அனைத்து எம்.பி.க்களும் பி.சி.ஆர். சோதனை செய்து கொள்ள வேண்டும்: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தல்

புதன்கிழமை, 20 ஜனவரி 2021      இந்தியா
Om-Birla 2021 01 19

Source: provided

புதுடெல்லி : பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக முன்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தியுள்ளார்.

இந்த ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 29-ம் தேதி தொடங்குகிறது .  மாநிலங்களவை 9 மணி முதல் 2 மணி வரை நடைபெறும். மக்களவை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த  மக்களவை, சபாநாயகர் ஓம் பிர்லா, பாராளுமன்ற உறுப்பினர்கள் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாராளுமன்ற வளாகத்துக்குள் கேண்டீன் இயங்காது என்றும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே உணவு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். 

இந்த முறை கேள்வி நேரம் மற்றும் பூஜ்ஜியம் நேரம் உண்டு என கூறிய அவர், கேள்வி நேரம் ஒரு மணிநேரம் இருக்கும் என்றும் தெரிவித்தார். பாராளுமன்ற வளாகத்திற்குள் வரும் 27-ம் தேதி மற்றும் 28-ம் தேதி பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து