6 மாதம் முதல் ஒரு வருடம் வரை வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க தயார்: மத்திய அமைச்சர்

புதன்கிழமை, 20 ஜனவரி 2021      இந்தியா
narendra-singh-tomar-2020 12 10

Source: provided

புதுடெல்லி : வேளாண் சட்டங்களை 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை நிறுத்தி வைக்க தயார் என்று விவசாய சங்க பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர் தோமர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாய சங்கங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே 10 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

நேற்று நடைபெற்ற வரும் 10 -ம் கட்ட பேச்சுவார்த்தையில்  வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை நிறுத்தி வைக்க தயார் என்று விவசாய சங்க பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தையில், மத்திய அமைச்சர் தோமர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் ஒரு குழு அமைத்து விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என மத்திய அமைச்சர் தோமர் யோசனை தெரிவித்துள்ளதாகவும், போராட்டத்தை கைவிடுவது குறித்து இன்றே(நேற்று) முடிவு எடுக்க வேண்டும் என்றும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் தோமர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து