முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார் டிரம்ப்

புதன்கிழமை, 20 ஜனவரி 2021      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன், நேற்று (ஜன, 20) பதவியேற்றார்.  பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்த டிரம்ப், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார்.

அமெரிக்க அதிபர் பதவிக்கு கடந்தாண்டு நவம்பரில் நடந்த தேர்தலில், குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அமெரிக்காவின் 46-வது அதிபராக அதிபராக நேற்று (ஜன, 20) பதவியேற்றுக் கொண்டார். . 

இந்நிலையில் பதவி விலக உள்ள டிரம்ப், ஜோபைடனுக்கு வாழ்த்து தெரிவித்து பேட்டியளித்தார். முன்னதாக ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாட்டேன் என அறிவித்திருந்தார்.

இதையடுத்து நேற்று வெள்ளை மாளிகையிலிருந்து தனது மனைவி மெலானியா டிரம்ப்புடன் அவர் வெளியேறினார். 21 குண்டுகள் முழங்க அவர் வழியனுப்பி வைக்கப்பட்டார். இதன் மூலம் பதவியேற்பு விழாவை புறக்கணித்த முதல் அமெரிக்க அதிபர் என்ற பெயர் பெற்றார் டிரம்ப்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து