முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இடஒதுக்கீடு வழங்கினால் நீட் தேர்வின் தகுதி நீர்த்துப் போகும்: ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில்

வியாழக்கிழமை, 21 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

புதுவை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால் நீட் தேர்வின் தகுதியை நீர்த்துப் போகச் செய்யும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

அதில், புதுவை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு தந்தால் நீட் தேர்வின் தகுதியை நீர்த்துப் போகச் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு சட்டம் பற்றி தங்களின் கவனத்திற்கு வரவில்லை என்றும், புதுச்சேரி அரசின் சட்டம் குறித்து ஆய்வு செய்வதற்கு 6 வாரம் அவகாசம் வேண்டும் என்றும் மத்திய அரசு பதில் மனுவில் கூறி உள்ளது.  இதையடுத்து வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து