முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு: கேரள சட்டசபையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

வியாழக்கிழமை, 21 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

கேரள மாநிலத்தில் சபாநாயகரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டதையடுத்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. 

கேரள மாநிலத்தை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுடன், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, சபாநாயகரை பதவி நீக்கம் செய்யக் கோரி, எதிர்க்கட்சிகள் சார்பில் சட்டமன்றத்தில் நேற்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது.  எம்.எல்.ஏ. உமர் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார். அதன்பின்னர் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராஜகோபால் உள்ளிட்ட 20 உறுப்பினர்கள் தீர்மானத்தை ஆதரித்தனர். சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் என்பதால், விவாதத்தின் போது துணை சபாநாயகர் அவையை வழிநடத்தினார். சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன், துணை சபாநாயகரின் இருக்கையில் அமர்ந்து விவாதத்தை கவனித்தார்.  

விவாதத்திற்கு பிறகு சபாநாயகர் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பேசினார். அவர் பேசி முடித்ததும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் மெஜாரிட்டி இல்லாத நிலையில், தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து