முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன ஆன்லைன் கந்துவட்டி செயலி வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற உத்தரவு

வியாழக்கிழமை, 21 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

சீன ஆன்லைன் கந்துவட்டி செயலி வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற உத்தரவிட்டுள்ளது. வழக்கில் தொடர்புடைய சீனர்களிடம் விசாரிக்க உள்ளதால் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

சீனா, சிங்கப்பூரில் இருந்து அழைத்து வந்து விசாரிக்க உள்ளதால் வழக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு பணப்பரிவர்த்தனையில் தொடர்பு இருப்பதாலும் வழக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என டி.ஜி.பி. கூறினார். 5 மாநிலங்களிலும் வழக்கு விசாரணைக்கு தொர்பு இருப்பதால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக கந்துவட்டிச் செயலியை இயக்கி வந்த  இரண்டு சீனர்கள் உள்ளிட்ட நால்வரை சென்னை மத்திய குற்றப்பிரிவு கடந்த 3-ம் தேதி பெங்களூரில் கைது செய்தது. அதில் 2 சீனர்கள், 2 பேர் கால் சென்டரில் பணிபுரிந்தவர்கள். கைது செய்யப்பட்ட இரண்டு  சீனர்களிடமிருந்து இரண்டு மடிக்கணினிகள், ஆறு மொபைல் போன்கள், இரண்டு சீன பாஸ்போர்ட் மற்றும் ஏ.டி.எம் கார்டுகளை காவல்துறை பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் மீது இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டம், தமிழ்நாடு கந்துவட்டி தடை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து