கொரோனா தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பு திறன் வாய்ந்தது: மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்

வியாழக்கிழமை, 21 ஜனவரி 2021      இந்தியா
Harshavardhan-2021 01 21

கொரோனா தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பு நிறைந்தவை மற்றும் திறன் வாய்ந்தவை என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார்.

இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரான கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன.  இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களுக்கு முதற்கட்டத்தில் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. எனினும், தடுப்பூசி போட்ட பின்னர் வயது வித்தியாசமின்றி ஒரு சிலர் உயிரிழந்து வரும் சம்பவங்களும் வெளிவருகின்றன.  ஆனால், தடுப்பூசிக்கும், உயிரிழப்புக்கும் தொடர்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் வகையில், மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, கொரோனா தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பு நிறைந்தவை மற்றும் திறன் வாய்ந்தவை என்பது தெளிவானது.  பக்க விளைவுகள் ஏற்படுகிறது என கூறப்படுவது பொதுவானது.  எந்தவொரு தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்பும் இதனை நீங்கள் காணலாம்.  தடுப்பூசி என்பது கொரோனாவுக்கான கல்லறை பெட்டியில் இறுதியாக அடிக்கப்படும் ஆணி ஆகும்.  அரசியல் காரணங்களுக்காக தடுப்பூசி பற்றி தவறான தகவல்களை சிலர் பரப்புவது துரதிர்ஷ்டவசமானது.  இதனால் தடுப்பூசி போட்டு கொள்வதற்கு மக்களில் ஒரு சிலர் தயக்கம் காட்டுவதற்கு வழிவகுத்து உள்ளது.  இதுபோன்ற தயக்கம் உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்து கொள்ள அரசும் விரும்பவில்லை.  நம்முடைய மருத்துவர்களை போன்று ஒவ்வொருவரும் சம பாதுகாப்பு பெற வேண்டும் என்றே கூறுகிறோம் என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து