முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரறிவாளன் விடுதலை விவகாரம்: கவர்னர் முடிவெடுக்க ஒரு வார காலம் அவகாசம்: சுப்ரீம் கோர்ட்

வெள்ளிக்கிழமை, 22 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பேரறிவாளன் விடுதலை விவகாரம் குறித்து தமிழக அரசின் தீர்மானத்தின் மீது கவர்னர் முடிவெடுக்க ஒரு வாரம் அவகாசம் அளித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதனிடையே பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய 3 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு பரிந்துரைத்தது. இதன் மீது தமிழக கவர்னர் முடிவெடுக்காமல் உள்ளார். 

இந்நிலையில், கவர்னர் தாமதம் செய்வதால் சுப்ரீம் கோர்ட்டே தன்னை விடுவிக்க வேண்டும் என்று பேரறிவாளன் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை, ஜனாதிபதிதான் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு வக்கீல் நடராஜன் வாதிட்டார்.  

இந்நிலையில் நேற்று முன்தினம் ஆஜரான மத்திய அரசு தலைமை வக்கீல் துஷார் மேத்தா, அரசியல் சட்டம் 161-வது பிரிவின்படி மாநில அமைச்சரவை கூடி 7 பேரையும் விடுவிக்க 2018-ம் ஆண்டு செப்டம்பரில் முடிவெடுத்தது.

தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று கவர்னர், 7 பேரையும் விடுதலை செய்யலாம் என சட்ட நிபுணர்கள் கூறினர். 7 பேரை விடுவிப்பதில் கவர்னருக்கு உடன்பாடு இல்லை எனில் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு கோப்புகளை திருப்பி அனுப்பலாம் என கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் கவர்னர் இன்னும் 3 நாட்களில் முடிவு எடுப்பார் என மத்திய அரசு கூறியிருந்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடைபெற்ற விசாரணையில் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அரசின் தீர்மானத்தின் மீது முடிவெடுக்க தமிழக கவர்னர் முடிவெடுக்க ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்  உத்தரவிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து