முதல்வர் எடப்பாடி நாளை சேலம் பயணம்

வெள்ளிக்கிழமை, 22 ஜனவரி 2021      தமிழகம்
Edappadi 2020 11 25

Source: provided

சேலம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை 24-ம்தேதி சேலம் செல்கிறார். 

தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே பிரசாரத்தில் இறங்கி விட்டன. அந்த வகையில் தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்.  

இந்த நிலையில் நாளை 24-ம் தேதி இரவு கோவையில் இருந்து கார் மூலம் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி சேலம் செல்கிறார். அவருக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

பின்னர் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் இரவு தங்குகிறார்.  அதை தொடர்ந்து 25-ம் தேதி காலை எடப்பாடி தொகுதி சிலுவம்பாளையம் அருகே கோனேரிப்பட்டியில் உள்ள ஓம் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் முதல்வர்  எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். 

தொடர்ந்து கள்ளக்குறிச்சிக்கு செல்லும் அவர் மாலையில் அங்கு நடக்கும் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் வருகையை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து