முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 27-ம் தேதி திறப்பு விழா: இறுதிகட்ட பணிகள் குறித்து ஜெயலலிதா நினைவிடத்தில் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். ஆய்வு

வெள்ளிக்கிழமை, 22 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஜெயலலிதா நினைவிடத்தில் இறுதிகட்ட பணிகள் குறித்து முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர்  ஓ.பன்னீர் செல்வம் ஆய்வு செய்தனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம்  தேதி இறந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரை ஓரத்தில் எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிடம் கட்ட முடிவெடுக்கப்பட்டது. இந்த பணியை கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 8-ம் தேதி முதல்வர்  எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தொடங்கி வைத்தனர்.  

தொடர்ந்து இரவு, பகலாக ஒப்பந்தக்காரர்களுடன், பொதுப்பணித்துறை தீவிரமாக பணிகளில் ஈடுபட்டு வந்தது. கொரோனா மற்றும் மழை காரணமாக திட்டமிட்ட காலத்தில் பணிகள் முடிப்பதில் சற்று காலதாமதம் ஆனது. இருந்தாலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கடி பணிகளின் முன்னேற்றம் குறித்து அடிக்கடி ஆய்வு செய்து ஆலோசனை வழங்கி வந்தார். தற்போது நினைவிடம் பணிகள் நிறைவடைந்து உள்ளது. 

இந்த நிலையில், வரும் 27-ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. காலை 11 மணிக்கு தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

வரும் 27-ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்படவுள்ள நிலையில், அங்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட மெரினா கடற்கரையில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், நினைவிட கட்டுமான பணிகளை  முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து