முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிர்வாக நடவடிக்கைகளில் ஜோ பைடன் சாதனை

சனிக்கிழமை, 23 ஜனவரி 2021      உலகம்
Image Unavailable

அமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், பதவியேற்ற முதல் நாளிலேயே, முந்தைய அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்த சில கொள்கை முடிவுகளை அதிரடியாக மாற்றினார். 

பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் மீண்டும் இணைதல், அமெரிக்க-மெக்சிகோ எல்லைச் சுவர் கட்டுமானம் நிறுத்தம், அமெரிக்கா-கனடா இடையிலான எரிவாயு இணைப்பு திட்டமான, கீஸ்டோன் எக்ஸ்.எல். பைப்லைன் திட்டம் ரத்து, உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணைதல், பல்வேறு முஸ்லிம் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் உள்ளிட்ட 15 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டார். 2-வது நாளில் இரண்டு உத்தரவுகளில் கையெழுத்திட்டார். இந்த அதிரடி நடவடிக்கை தொடர்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து