முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானா முதல்வராகிறார் சந்திரசேகர ராவ் மகன்

சனிக்கிழமை, 23 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

தெலுங்கானாவின் அடுத்த முதல்வராக, முதல்வர் சந்திரசேகர ராவின் மகன் ராமாராவ் விரைவில் பதவியேற்பார் என சட்டசபை துணை சபாநாயகர் பத்மா ராவ் கூறியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. மாநில சட்டசபை துணை சபாநாயகர் பத்மா ராவ், தனியார், 'டிவி' சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தெலுங்கானா அரசியலில் விரைவில் மாற்றங்கள் நிகழ உள்ளன. ஆட்சியில் கூட மாற்றம் ஏற்பட உள்ளது. மாநிலத்தின் அடுத்த முதல்வராக, முதல்வர் சந்திரசேகர ராவின் மகன் ராமாராவ், விரைவில் பொறுப்பேற்பார். அடுத்த மாதம் இந்த மாற்றம் ஏற்படும். இது பற்றி சந்திரசேகர ராவ் குடும்பத்தில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதில் ஆச்சர்யமோ, அதிசயமோ எதுவும் இல்லை. ஏனெனில் அரசின் நல திட்டங்கள் அனைத்தும் ராமாராவின் ஆலோசனைப்படி தான் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து