முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓசூர் கொள்ளை விவகாரம்: கொள்ளையர்களை பிடித்த தமிழக காவல்துறையினருக்கு முதல்வர் எடப்பாடி பாராட்டு

சனிக்கிழமை, 23 ஜனவரி 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : ஓசூர் கொள்ளை விவகாரத்தில் 18 மணி நேரத்தில் கொள்ளையர்களை பிடித்த தமிழக காவல்துறையினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஓசூர் நகரின் மையப்பகுதியில், நேற்று முன்தினம் பட்டப்பகலில் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் நடந்த நகை கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொள்ளையர்களை பிடிக்க தமிழக காவல்துறையினர் 10 தனிப்படைகளை அமைத்து தேடி வந்தனர்.  கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் எஸ்.பி சக்திவேல் தலைமையிலான குழு அவர்களை பின்தொடர்ந்து ஐதராபாத்தில் 6 பேரை கைது செய்தனர். 6 பேரும் மத்தியபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களிடம் இருந்து 7 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் ஓசூர் கொள்ளை விவகாரத்தில் 18 மணி நேரத்தில் கொள்ளையர்களை பிடித்த தமிழக காவல்துறையினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், 

தமிழக காவல்துறையினரின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் முத்தூட் நிறுவனத்தில் நடைபெற்ற கொள்ளையில் திருடு போன 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ தங்கத்தையும், கொள்ளையர்களையும் துரிதமாக செயல்பட்டு, 18 மணி நேரத்தில் பிடித்த தமிழக காவல்துறையினருக்கு, குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறைக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து