தேசிய பெண் குழந்தைகள் தினம்: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜனவரி 2021      இந்தியா
modi 2020 11 10-1 (1)

Source: provided

புதுடெல்லி - தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, 

தேசிய பெண் குழந்தைகள் தினத்தன்று பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்து வரும் நம் நாட்டு திருமகள்களுக்கு வணக்கம் செலுத்துகிறோம். பெண் குழந்தைகளுக்கு அதிகாரம், போதியக் கல்வி, நல்ல சுகாதாரம், பாலின பாகுபாடற்ற அக்கறை ஆகியவற்றை வழங்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். 2008-ம் ஆண்டு முதல் ஜனவரி 24-ம் தேதி தேசிய பெண் குழந்தை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து