புதுடெல்லி, ஜன. 26. ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசு பத்ம விருதுகளை அறிவிப்பது வழக்கம். அதன்படி நேற்று மத்திய அரசு இந்த விருதுகள் பற்றிய விவரங்களை அறிவித்தது.
அதன்படி மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல தமிழ் அறிஞரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு பத்ம ஷ்ரி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சுப்பு ஆறுமுகம், பாப்பம்பாள் ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உள்பட 7 பேருக்கும் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சுமித்ரா மகாஜனுக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.