முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவிடம் இருந்து தேஜாஸ் போர் விமானங்களை வாங்க பல நாடுகள் ஆர்வம்

செவ்வாய்க்கிழமை, 26 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி.ஜன.26. 
தேஜாஸ் போர் விமானங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர்.மாதவன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், தேஜாஸ் போர் விமானங்களை வாங்குவதற்கு பல நாடுகள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளன. அடுத்த 2 ஆண்டுகளில் முதல் ஏற்றுமதி ஆர்டர் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் இந்திய விமானப்படைக்கு 83 தேஜாஸ் போர் விமானங்களை வழங்குவது என்பது 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும். இப்படி வழங்கி முடிக்கும் வரையில் ஆண்டுக்கு 16 போர் விமானங்கள் தயாரித்து முடிக்கப்படும் எனவும் கூறினார்.

சீனாவின் ஜே.எப்-17 போர் விமானத்தைக் காட்டிலும், தேஜாஸ் மார்க் 1ஏ போர் விமானம் சிறந்த செயல்திறனை கொண்டிருப்பதாகவும், சிறந்த எந்திரம், ரேடார் அமைப்பு மற்றும் மின்னணு சாதனங்களை கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து