முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழைய ரூ.100 புழக்கத்தை நிறுத்துவதாக பரவும் தகவலில் உண்மையில்லை ரிசர்வ் வங்கி விளக்கம்

செவ்வாய்க்கிழமை, 26 ஜனவரி 2021      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி.ஜன.26. பழைய ரூ.100 புழக்கத்தை நிறுத்துவதாக பரவும் தகவலில் உண்மையில்லை என்று ரிசர்வ் வங்கி தற்போது விளக்கம் தந்துள்ளது.

மங்களூருவில் மாவட்ட வங்கி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாதுகாப்புக் குழு மற்றும் மாவட்ட அளவிலான நாணய மேலாண்மைக் குழு கூட்டத்தில் கலந்து கொண்ட ரிசர்வ் வங்கியின் துணைப் பொது மேலாளர் பி மகேஷ் கூறுகையில் மார்ச்-ஏப்ரல் மாதத்திற்குள் ரிசர்வ் வங்கி பழைய 100, 10 மற்றும் 5 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற திட்டமிட்டுள்ளதால் அவை புழக்கத்தில் இருக்காது என்று கூறியிருந்தார்.

அவர் மேலும் பேசுகையில் 10 ரூபாய் நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகளுக்குப் பிறகும், வர்த்தகர்களும் வியாபாரிகளும் அந்த நாணயங்களை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் என்றும் இது மற்ற வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனால் பெரும்பாலான வங்கிகளில் 10 ரூபாய் நாணயங்கள் தேங்கி கிடக்கின்றன என்றார்.

10 ரூபாய் நாணயம் செல்லாது என கூறப்படுவது ஒரு வதந்தி என்பதை வங்கிகள் மக்களுக்கு உணர்த்த வேண்டும் என்றும் ரூ.10 நாணயத்தை பொதுமக்கள் மத்தியில் மீண்டும் கொண்டு வருவதற்கான வழிகளை வங்கிகள் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் மகேஷ் அறிவுறுத்தினார்.

இந்நிலையில் பழைய 100, 10, 5 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்துவதாக பரவும் தகவலில் உண்மையில்லை என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து