9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுமா ? அமைச்சர் செங்கோட்டையன் பதில்

செவ்வாய்க்கிழமை, 26 ஜனவரி 2021      தமிழகம்
25 ARASU 34

ஈரோடு.ஜன.26. தமிழகத்தில் கொரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், 10 மாதங்களுக்குப் பிறகு கடந்த 19-ம் தேதி திறக்கப்பட்டன. பொதுத்தேர்வை எழுத உள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

வகுப்புக்கு 25 மாணவர்கள், கட்டாய முகக்கவசம், தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலைப் பரிசோதனை உள்பட கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது தொடர்பாக அமைச்சர் செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்றும் சில பள்ளிகளில் கொரோனா தாக்கம் உள்ளதாக கூறப்படும் தகவல்கள் தவறானது. 2 ஆசிரியர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து