Idhayam Matrimony

ஸ்டாலின் பேச்சை கேட்டு மக்கள் ஏமாறமாட்டார்கள்: தி.மு.க.,விற்கு சட்டசபை தேர்தலில் 34 தொகுதிகள்தான் கிடைக்கும்

செவ்வாய்க்கிழமை, 26 ஜனவரி 2021      அரசியல்
Image Unavailable

கள்ளக்குறிச்சி.ஜன.26. வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெறும் 34 தொகுதிகளில்தான் வெற்றி பெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும் ஸ்டாலின் நடத்தும் கிராம சபை கூட்டங்களை கண்டு மக்கள் ஏமாறமாட்டார்கள் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க. சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அதில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

தாய்மொழிக்காக போராடி உயிர்நீத்தவர்களின் தியாகம், உலகம் உள்ளவரை போற்றப்படும். தமிழக மக்களை பாதிக்கும் எந்தவித திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தாது. முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின்கீழ் மக்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களிடம் பெறப்பட்ட மனுக்களுக்கு அரசு தீர்வு கண்டுள்ளது.

மனுக்களை பெறுவது எதற்காக ?

தமிழகம் முழுவதும் இதுவரை 5.27 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மக்கள் கிராம சபைக்கூட்டம் என்ற பெயரில் ஸ்டாலின் கூட்டும் கூட்டங்களைக் கண்டு மக்கள் ஏமாற மாட்டார்கள். ஸ்டாலின் பொதுமக்களிடம் மனுக்களை பெறுவது எதற்காக? ஏற்கனவே பெற்ற மனுக்களை ஸ்டாலின் என்ன செய்தார்? மக்களிடம் தி.மு.க. பெற்ற மனுக்களை அரசிடம் ஒப்படைத்திருந்தால் அதற்கு தீர்வு காணப்பட்டிருக்கும். ஸ்டாலின் கவர்ச்சியாக பேசி பொதுமக்களை திசை திருப்ப முயற்சிக்கிறார்.

ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்பு 234 தொகுதிகளில் தி.மு.க. பெற்றி பெறும் என அறிவித்தார். அடுத்த சில நாட்களில் 200 இடங்களில் வெற்றி பெறும் என்றார். இப்படியாக படிப்படியாக குறைந்து அடுத்த வாரத்தில் 100 தொகுதி என்பார். ஆனால் தேர்தலின் முடிவில் தி.மு.க. வெறும் 34 தொகுதிகளில் தான் வெற்றி பெறும்.

இந்திய வரலாற்றிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க. தான். அப்படியிருக்கையில் ஊழல் குறித்து தி.மு.க.,வினர் பேசலாமா? குடும்பக் கட்சியான தி.மு.க. நாட்டை ஆள வேண்டுமா என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து