விமான விபத்தில் 4 கால்பந்து வீரர்கள் பலி

செவ்வாய்க்கிழமை, 26 ஜனவரி 2021      விளையாட்டு

பால்மஸ்.ஜன.26. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பால்மஸ் கால்பந்து கிளப்பின் தலைவர் லூகாஸ் மெய்ரா மற்றும் வீரர்களான லூகாஸ் ராஸ்டெஸ், குயில்லர்மொ, ரொனால்டு, மார்க்கஸ் ஆகிய 5 பேர் பலியானார்கள்.

பால்மஸ் நகரில் இருந்து கோயானியா நகருக்கு புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் இருந்து மேலே செல்லும் போது விபத்தில் சிக்கியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து